சந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ! அதன் சிறப்புகள் என்ன ?

சந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ! அதன் சிறப்புகள் என்ன ?
சந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ! அதன் சிறப்புகள் என்ன ?

சந்திராயன்-II விண்கலம் வரும் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் -2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதில் ரஷ்யாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கியுள்ளது.

இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் மார்க் வகைக்கொண்ட ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதில் எடைக் குறைந்த ராக்கெட்டுகளை பி.எஸ்.எல்.வி. மூலமாகவும், 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மூலமாகவும், இன்னும் கூடதலான எடை கொண்ட செயற்கைக்கோள்களை கிட்டத் தட்ட 3000 முதல் 4000 கிடோ எடைக் கொண்ட செயற்கைக்கோள்களை மார்க் 3 ராக்கெட் மூலமாகவும் ஏவி வருகிறது.

எனவே அதிக எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் மிக பலமான ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை இஸ்ரோவின் பாகுபலி என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கின்றனர். இஸ்ரோவின் முதல் ராக்கெட்டான எஸ்எல்வி - 3 உயரம் 22.7 மீட்டர், 40 கிலோ எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக இருந்தது. இதற்கடுத்து ஏஎஸ்எல்வி ராக்கெட் 23.5 மீட்டர் உயரமும் 150 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்றது. அதன் பின்பு, இஸ்ரோ தனது முயற்சியில் ஒரே பாய்ச்சலாக பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை தயாரித்தது அவை 44 மீட்டர் உயரமும், 1860 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோள்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. 

இஸ்ரோ விண்ணில் பல சாதனைகளை நிகழ்த்தியது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகத்தான். இதற்கடுத்து ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட்டுகளை தயாரித்தது. இது இஸ்ரோவின் தயாரிப்பிலேயே அதிக உயரம் கொண்டது, இது 49 மீட்டர் உயர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. மேலும் 2200 கிலோ எடைக்கொண்ட செயற்கைக்கோளை கொண்டு செல்லும் வகையில் நவீனப்படுத்தப்பட்டது. இப்போது ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட்டை வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. 

இது மார்க் 2 ராக்கெட்டைவிட உயரத்தில் குறைவு அதாவது இதன் உயரம் 43.43 மீட்டர்தான். ஆனால், 4 ஆயிரம் கிலோ வரை எடைக்கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்தும் திறனை பெற்றுள்ளது. இஸ்ரோ கடந்தாண்டு மூன்றாவது முறையாக மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. அதில் கடல்சார் ஆராய்ச்சி, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, உயர்நுணுக்கமான தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஜிசாட் 29 என்ற செயற்கைகோள் பயனப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் 3,423 கிலோ எடை கொண்டதாக இஸ்ரோ உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com