விண்ணில் ஏவப்பட்டது 'அனிதா சாட்'

விண்ணில் ஏவப்பட்டது 'அனிதா சாட்'

விண்ணில் ஏவப்பட்டது 'அனிதா சாட்'
Published on

திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவி வில்லட் ஓவியா தயாரித்த "அனிதா சாட்" செயற்கைக்கோள் மெக்சிகோவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

திருச்சி திருவெறும்பூர் கைலாசபுரம் பகுதியிலுள்ள ஆர்.எஸ்.கே.மேல்நிலைப் பள்ளியில் படித்து +2 தேர்வு முடிவிற்காக காத்திருக்கிறார் வில்லட் ஓவியா. இவர் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான நீட் தேர்வை எழுதியுள்ளார். சிறு வயது முதலே அறிவியல் மீது காதல் கொண்டதால், காற்று மாசுபாடை கணக்கிடவும் புவி வெப்பமயமாதலை கண்டறியவும் சிறியரக செயற்கைக்கோளை கண்டுபிடித்துள்ளார். இந்த சிறியரக செயற்கைக்கோள் மெக்சிகோ நாட்டில் இருந்து இந்திய நேரப்படி நேற்று காலை ஏவப்பட்டது.

இது குறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ஓவியா,

 “ வில்லட் ஓவியா என்றால்‘கிராமத்து ஓவியம்’ என்று அர்த்தம். அதைதான் எனக்குப் பெயராக சூட்டியுள்ளனர் எனது பெற்றோர். சிறு வயது முதலே அறிவியல் கண்டிப்புகள் மீது எனக்கு ஆர்வம் அதிகம். எனவே எங்கள் பள்ளியில் நடக்கும் அறிவியல் போட்டிகளிலும், வெளியில் நடக்கும் போட்டிகளிலும் கலந்து கொள்வேன். இவ்வாறாக அறிவியல் மீது கொண்ட நாட்டத்தால் நான் சிறியரக செயற்கைக்கோள் ஒன்றை வடிவமைத்தேன். இந்தச் செயற்கைக்கோள் காற்று மாசுபடுதலை கணக்கிடவும்,பூமி வெப்பமயமாதலை கண்டறியும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1/2 கிலோ எடையுள்ள அதனை உருவாக்கி மெக்சிக்கோ நாட்டிற்கு அனுப்பி வைத்தேன். மேலும் என்னை போல மருத்துவர் கனவில் வாழ்ந்து அந்தக் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்தாண்டு நம்மை விட்டு பிரிந்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, எனது கண்டுபிடிப்புக்கு அனிதா சாட் என்று பெயர் வைத்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஓவியா.

இந்தச் செயற்கைக்கோள் இந்திய நேரப்படி நேற்று காலை 7 மணியளவில் ஏவப்பட்டது. இளம் விஞ்ஞானியான ஓவியா அறிவியலில் மட்டுமல்லாமல் வீணை மீட்டுவது, நடனம் ஆடுவது, ஓவியம் வரைவது உள்ளிட்ட பன்முகத் திறமையுடன் திகழ்ந்து வருகிறார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com