பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோவிடம் போட்டிபோட்டு கொண்டு அதனை பின்னுக்கு தள்ளும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம், அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் 5ஜி சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5G இன் வேகமானது 4G ஐ விட அதிவேகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 5ஜி தொழில்நுட்பம் குறித்து கோரியண்ட் நிறுவனத்தின் ஆலோசனையையும் பிஎஸ்என்எல் பெற்றிருக்கிறது. மேலும் லார்சன் அண்ட் டூப் மற்றும் ஹெச்பி நிறுவனங்களிடம் பிஎஸ்என்எல் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. சுற்றுச்சூழல் மாற்றத்தினால் 5ஜி தொழிநுட்பத்தின் வேகம் ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் மிகப்பெரிய ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது என்பதும், இது 7 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.