’’இது தான் அரோரா - ஏர் க்ளோ சந்திப்பு’’ - நாசா வெளியிட்ட வண்ணமயமான புகைப்படம்..!

’’இது தான் அரோரா - ஏர் க்ளோ சந்திப்பு’’ - நாசா வெளியிட்ட வண்ணமயமான புகைப்படம்..!
’’இது தான் அரோரா - ஏர் க்ளோ சந்திப்பு’’ - நாசா வெளியிட்ட வண்ணமயமான புகைப்படம்..!

நாசா அவ்வப்போது விண்வெளியில் எடுக்கப்பட்ட சில அழகிய வித்தியாசமான படங்கள் மற்றும் பிற கிரகங்களின் படங்களை பகிர்ந்துவருகிறது.

’’அரோரா, ஏர் க்ளோவை பாருங்கள்’’ என்ற தலைப்பில் சமீபத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறது. வண்ணமயமான வளிமண்டல அடுக்குகள் விடியற்காலையில் ஒன்றையொன்று சந்தித்தபோது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு விண்வெளி வீரர் அந்த படத்தை க்ளிக் செய்துள்ளார்.

அலாஸ்கான் தீபகற்பத்தின் தெற்கே உள்ள இந்த நிலையத்தை பச்சை, சிவப்பு அலைகள் கடந்தபோது க்ளிக் செய்யப்பட்டது. சூரியன் உதித்து வரும்போது அடிவானத்தில் அடர் நீல நிறமும், மேலே சிவப்பு - மஞ்சள் வண்ணங்களும் கலந்து கண்களை கவர்கிறது. பிரிட்டிஷ், கொலம்பியா மற்றும் கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள நகரங்களில் அதிகாலை வெளிச்சம் வானளாவி வரும்போது நட்சத்திர ஒளியுடன் இணையும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

அரோரா மற்றும் ஏர் க்ளோ ஆகியவை ஒரே உயரத்தில் தோன்றினாலும், அவை வெவ்வேறு செயல்முறைகளால் உருவாக்கப்படுகிறது. ஏர் க்ளோ என்பது ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் மேல் வளிமண்டலத்தில் உள்ள பிற மூலக்கூறுகளுக்கு இடையேயான வேதியியல் நிகழ்வால் வெளிச்சம் உருவாவது. அரோரா என்பது, சூரிய சக்தி மற்றும் காந்தபுலத்திற்கு இடையிலான தொடர்புகளால் உருவாவது என்பதை இந்த படங்கள் தெளிவாகக் காட்டுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com