மானுட மாற்றத்தின் ஆணிவேர்களான ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஊடகத் துறையில் சமூக அக்கறையோடு திகழும் “புதிய தலைமுறை” குழுமம், "கனவு ஆசிரியர்" அமைப்போடு இணைந்து “புதிய தலைமுறை ஆசிரியர் விருது” என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
ஆசிரியர்களை மதித்து அவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தும் சமூகம் தம்மைத் தாமே சிறப்பித்துக் கொள்கிறது. அந்த வகையில் ஒரு மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சிறந்த பங்களிப்பை ஆற்றி வரும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த விருதை வழங்கி உலகிற்கு அடையாளப்படுத்தும் முயற்சியே “புதிய தலைமுறை ஆசிரியர் விருது”.