\
‘Zoom செயலியை கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’-உதயநிதி ஸ்டாலின்

‘Zoom செயலியை கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’-உதயநிதி ஸ்டாலின்

‘Zoom செயலியை கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’-உதயநிதி ஸ்டாலின்
Published on

ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என தி.மு.க பொதுக்குழுவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் தி.மு.க பொதுக்குழு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின்,

‘ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் தலைவர் ஸ்டாலினுக்குதான் ராயல்டி கொடுக்க வேண்டும். ஏனெனில் பொதுக்குழுவையே ஜூமில் நடத்தி முடித்துள்ளார் தலைவர். 

கொரோனா சூழலிலும் ஆக்டிவாக களத்திற்கு செல்லாமலே பணியாற்ற ஜூம் செயலி தலைவருக்கு உதவி வருகிறது. கடந்த சில மாதங்களாக நானும் ஜூம் அப்ளிகேஷனை பயன்படுத்தி கள நிலவரத்தை அறிந்து கொள்கிறேன். 

யாரிடம் பேசினாலும் தலைவர் இப்போது தான் ஜூமில் பேசி கள நிலவரத்தை அறிந்து கொண்டதாக சொல்கிறார்கள். 

நான் தலைவரிடம் பேசியதில் இதுவரை 250க்கும் மேற்பட்ட ஜூம் கால்களை தலைவர் பேசியுள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்’ என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

மேலும் தலைமையின் கட்டளைக்கு இணங்க பணியாற்ற இளைஞரணி காத்திருக்கிறது எனவும் தனது உரையில் அவர் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com