சென்னையில் மண்டல வாரியாக எங்கெங்கு எத்தனை பேருக்கு கொரோனா..?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை நாள்தோறும் சுகாதாரத் துறை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்புக் கட்டுக்குள் வந்தாலும் சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டும் கொரோனா குறித்த நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் நேற்று மட்டும் 176 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அந்தவகையில் சென்னையில் தற்போது வரை மண்டல வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் விவரங்கள்.
திருவொற்றியூர் - 19
மணலி - 3
மாதவரம் - 4
ராயபுரம் - 216
திரு.வி.க. நகர் - 259
அம்பத்தூர் - 33
அண்ணா நகர் - 91
தேனாம்பேட்டை - 132
கோடம்பாக்கம் - 116
வளசரவாக்கம் - 60
ஆலந்தூர் - 9,
அடையாறு - 21
பெருங்குடி - 9
சோழிங்கநல்லூர் - 3
பிறமாவட்டத்தை சேர்ந்தவர்கள் - 6