\
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. எங்கெல்லாம்..? எத்தனை பேர்..?

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. எங்கெல்லாம்..? எத்தனை பேர்..?

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. எங்கெல்லாம்..? எத்தனை பேர்..?
Published on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றினால் 5,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 149 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 402 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொருத்தவரை 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். சென்னையில் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 15 மண்டலங்கள் உள்ளன.

இதில் மண்டல வாரியாக எத்தனை பேர் எங்கெங்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பார்க்கலாம்.

திருவொற்றியூர் - 04
மணலி - 00
மாதவரம் - 03
தண்டையார்பேட்டை - 12
ராயபுரம் - 40
திருவிக நகர் - 22
அம்பத்தூர் - 00
அண்ணாநகர் - 15
தேனாம்பேட்டை - 11
கோடம்பாக்கம் - 19
வலசரவாக்கம் - 4
ஆலந்தூர் - 2
அடையார் - 4
பெருங்குடி - 5
சோழிங்கநல்லூர் - 2
மற்ற மாவட்டங்களோடு தொடர்புடையவர்கள் : 06

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com