யுவன்சங்கர் ராஜாபுதிய தலைமுறை
தமிழ்நாடு
"அன்று எனது அக்கா.." - மறைந்த பவதாரிணி குறித்து உருக்கமாக பேசிய யுவன் சங்கர் ராஜா!
தனது இசை பயணத்தில் பவதாரிணி மிக முக்கியமானவர் என
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
தனது இசை பயணத்தில் பவதாரிணி மிக முக்கியமானவர் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில் இலங்கை நாட்டின் கொழும்புவில் வரும் 24 ஆம் தேதி யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறநிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கொழும்புவில் நடைபெற்றது.
அதில் மறைந்த தனது சகோதரி பவதாரிணி குறித்து தெரிவிக்கையில், “எனக்கு பியோனோ இசைக்கக் கற்றுக்கொடுத்தது பவதாரிணிதான்.எனது இசை வாழ்வில் எனது அக்கா மிக முக்கியமானவர். “என யுவன்சங்கர் ராஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.