\
யுனானி மருத்துவர் அப்பிரஸ் பாஷா உயிரிழப்பில் மர்மம்?

யுனானி மருத்துவர் அப்பிரஸ் பாஷா உயிரிழப்பில் மர்மம்?

யுனானி மருத்துவர் அப்பிரஸ் பாஷா உயிரிழப்பில் மர்மம்?
Published on

ஓமந்தூரார் மருத்துவமனையில் உயிரிழந்த யுனானி மருத்துவரின் இறப்பில் சர்ச்சைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் யுனானி மருத்துவர் அப்பிரஸ் பாஷா. இவர் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், திடீரென இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைப்பலனின்றி கடந்த 27 ஆம் தேதி உயிரிழந்தார். இவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை எனவும் மற்ற உடல்நலக்குறைபாடுகளால்தான் உயிரிழந்தார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் ராஜிவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லாவின் உயிரிழப்பைப் போல் இம்மருத்துவரின் இறப்பிலும் சர்ச்சைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com