தலைமறைவாக இருந்த 'பப்ஜி' மதன் கைது

தலைமறைவாக இருந்த 'பப்ஜி' மதன் கைது
தலைமறைவாக இருந்த 'பப்ஜி' மதன் கைது

யூடியூப் சேனில் ஆபாசமாக பேசி சம்பாதித்து தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை போலீஸார் கைது செய்தனர்.

ஆபாசமாக பேசி பப்ஜி விளையாட்டை ஒளிப்பரப்பி வந்த மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறைக்கு புகார் வந்தது. பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மதன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மதன் மீது ஆன்லைன் மூலமாக 159 புகார்கள் வந்துள்ளன. விபிஎன் சர்வரை பயன்படுத்தும் மதன், தனது இருப்பிடத்தை கண்டுபிடிக்கமுடியாமல் செய்யும்நிலையில், பெருங்களத்தூர், சேலம் போன்ற பகுதிகளில் உள்ள பப்ஜி மதனின் வீட்டை சோதனை செய்து அவரது மனைவி கிருத்திகா, தந்தை மாணிக்கம் ஆகியோரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மதன் தொடங்கிய 3 யூடியூப் சேனலுக்கும் மனைவி கிருத்திகா அட்மினாக இருந்து வருவது தெரியவந்தது. வெளியிட்ட பப்ஜி வீடியோக்கள் மூலம் கிடைத்த வருமானத்தில் 3 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை மதன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. மதனுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி கைது செய்யப்பட்டு 30 ஆம்தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதுக்கு பயந்து தருமபுரியில் தலைமறைவாக இருந்த மதனை போலீஸார் இன்று கைது செய்தனர்.

#BREAKING | யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த 'பப்ஜி' மதன் கைது

இன்றைய லைவ் அப்டேட்ஸ்> https://t.co/BlYQ7WQtit#pubgmadhan | #toxicmadan pic.twitter.com/NhDo06QPEE
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 18, 2021

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com