“மனம் வருந்துகிறேன்” - சர்ச்சை செயலுக்கு மன்னிப்பு கோரினார் இர்ஃபான்!
ரம்ஜான் திருநாளன்று தனது மனைவியுடன் காரில் சென்று, ஏழைகளுக்கு உதவிப் பொருட்களை காருக்குள் இருந்துகொண்டே இர்ஃபான் வழங்கினார். அப்போது தங்களுக்கு உதவி கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் சிலர் முண்டியடித்துக் கொண்டு இர்ஃபானின் காருக்குள் கைகளை நீட்டியபோது அவர்களிடம் கடுமையாக பேசியதோடு, அவர்களை அவமதித்து பேசியுள்ளார். ஈகைத் திருநாளில் ஈகை செய்வதை இஸ்லாமிய பெருமக்கள் மிக முக்கியமாக கருதும் வேளையில், இர்ஃபானின் இந்த செயல் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து அவர் தனது செயலுக்கு வருந்துவதாக தற்போது தெரிவித்துள்ளார்.
முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாமல் மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால் சூழலை கையாளத் தெரியவில்லை என்று கூறியுள்ள இர்ஃபான், அதில் திணறி சில விஷயங்கள் செய்துவிட்டதாகவும், அதற்காக மனம் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார். கஷ்டப்படுகிறவர்கள் மேல் அக்கறை இல்லை என சிலர் சொல்கிறார்கள், அப்படியல்ல, நானும் அங்கிருந்து வந்தவன்தான் என்று கூறியுள்ள இர்ஃபான், தனது செயலுக்கு மனம் வருந்துவதாக கூறியுள்ளார்.