\
ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீது தடியடி

ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீது தடியடி

ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீது தடியடி
Published on

மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக பேரணி சென்ற இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்கள், பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்கள் எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் தமுக்க மைதானத்திலிருந்து ஊர்வலமாக சென்றனர்.

போராட்டத்தின் பொது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இளைஞர்கள் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com