\
தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த இளைஞர் உடல்: கொலையா? தற்கொலையா? - ரயில்வே போலீஸ் விசாரணை

தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த இளைஞர் உடல்: கொலையா? தற்கொலையா? - ரயில்வே போலீஸ் விசாரணை

தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த இளைஞர் உடல்: கொலையா? தற்கொலையா? - ரயில்வே போலீஸ் விசாரணை
Published on: 

ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா? அல்லது ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என்பது போன்ற பல கோணங்களில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளம் அருகே 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் உடல், தலை, கை, கால்கள் ஆங்காங்கே சிதைந்து கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்,

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர், ரயில் நிலையம் மற்றும் தண்டவாளங்களில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த இளைஞரின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com