ஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ

ஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ
ஐந்து பிள்ளைகள் வசதியாக இருந்தும் அநாதையாக திரியும் தாய் - வைரலாகும் வீடியோ

பெரம்பலூரில் பெண் போலீசாரின் வயதான தாய் ஒருவர் சாலையோரம் அனாதையாக தங்கியிருக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

பெரம்பலூர் அரசு குடியிருப்பு பகுதியில் பெண் போலீஸ் ஒருவரின் வயதான தாய், அவரால் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதியாக அமர்ந்திருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அந்த மூதாட்டியிடம் கேட்ட போது, தனக்கு சுமார் 75 வயது இருக்கும். பெரம்பலூர் வெங்கடேசபுரம்தான் பூர்வீகம். எனது பெயர் கிருஷ்ணவேணி, கணவர் திருவேங்கடம், அவர் இறந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனக்கு ஜோதிலட்சுமி, ஜெயந்தி, அமுதலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி என 5 பிள்ளைகள். 

இவர்களில் ஜோதிலட்சுமியும், அமுதலட்சுமியும் பாண்டிச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். நல்ல நிலையில் வீடு வாசல் தொழில் என சகல சவுகரியங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். ஜெயந்தி சென்னை திருவள்ளூரில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி என்ற இரண்டு மகன்களும் டிரைவர்கள் ஆனால் அவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்தி அவர்களை விரட்டி விட்டுவிட்டு, சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். நல்ல நிலையில் இருக்கும் எனது மகள்கள், கடைசி காலத்தில் என்னை வைத்து சோறு போட முடியாது என்று கூறி விரட்டி விட்டு விட்டனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் மகன்கள் கைவிட்டதனால், எனது மருமகள்கள் தங்களது குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். எனது மகன் அரியலூரில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் என்னை விட்டு சென்று விட்டார். அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல் என் மருமகளை தேடி இங்கு வந்தேன். என் மருமகள் அவரது உறவினர்கள் வீட்டில் இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டத்துடன் இங்கு வாழ்ந்து வருகிறார். அதனால் அவர்களுக்கு சிரமம் கொடுக்க மனமின்றி, சாலையிலும், கோயில் வாசலிலும் படுத்திருக்கிறேன். என்னை எப்படியாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுங்கள் என்று கூறி கதறினார். 

அவர்களது மகள்களை செல்போனில் தொடர்பு கொண்டு விவரம் கூறிய போது, நாங்கள் அவரை வைத்துக்கொள்ள முடியாது. எங்களுக்கு கஷ்மாக இருக்கிறது என்று கூறி ஒருவரையொருவர் கையை காட்டியுள்ளனர். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினருக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com