விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர்: காரில் அழைத்துச்சென்று காப்பாற்றிய அமைச்சர்

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர்: காரில் அழைத்துச்சென்று காப்பாற்றிய அமைச்சர்

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞர்: காரில் அழைத்துச்சென்று காப்பாற்றிய அமைச்சர்
Published on

பூவிருந்தவல்லியில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இளைஞரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தனது காரில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்விற்காக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது கார் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லி அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதனை அவ்வழியாக சென்ற அமைச்சர் கவனித்து காரை நிறுத்தியுள்ளார். பின்னர், ஆம்புலன்ஸிற்கு காத்திருக்காமல் அவரது காரில் ஏற்றிக் கொண்டு பூவிருந்தவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் சிறிதுநேரம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை அருகே நின்று கவனித்தார்.

இதையடுத்து எவிபத்தில் சிக்கிய வாலிபரின் உடல் சற்று முன்னேற்றம் அடைந்தவுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com