\
சென்னை வணிக வளாக மாடியிலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை

சென்னை வணிக வளாக மாடியிலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை

சென்னை வணிக வளாக மாடியிலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை
Published on

சென்னை வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் 4-ஆம் தளத்தில் இருந்து கிழே குதித்து, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலூரைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் சென்னை சாலிகிராமத்தில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகத்தின் உணவகம் ஒன்றில் தோழி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது தோழியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த யுவராஜ், திடீரென 4-ஆம் தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே, ஒரு தலைக்காதல் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com