அலங்காநல்லூரில் இளைஞரை கத்தியால் தாக்கி வழிப்பறி !

அலங்காநல்லூரில் இளைஞரை கத்தியால் தாக்கி வழிப்பறி !

அலங்காநல்லூரில் இளைஞரை கத்தியால் தாக்கி வழிப்பறி !
Published on

மதுரை அலங்காநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபரை கத்தியால் குத்தி அவரிடம் இருந்த ரூ.34 ஆயிரம் பணம் மற்றும் வாகனத்தை வழிப்பறி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் நேசபாலன். நேற்று இரவு பணியை முடித்த இவர் அலங்காநல்லூர் சாலை அருகே உள்ள சிக்கந்தர்சாவடி பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நேச பாலனை வழிமறித்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரின் தலை முதுகு என 4 இடங்களில் கத்தியால் குத்தி விட்டு அவர் வைத்திருந்த ரூ. 34 ஆயிரம் பணம், செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை வழிப்பறி செய்து விட்டு தப்பியோடியது.

ரத்த காயங்களுடன் சாலையில் தவித்த நேச பாலனை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து சம்பவம் குறித்து அறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழிப்பறி செய்த கும்பலை இரண்டு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com