\
குப்பைகளை அகற்றி முன்மாதிரியாக திகழும் போராட்ட இளைஞர்கள்..!

குப்பைகளை அகற்றி முன்மாதிரியாக திகழும் போராட்ட இளைஞர்கள்..!

குப்பைகளை அகற்றி முன்மாதிரியாக திகழும் போராட்ட இளைஞர்கள்..!
Published on

மெரினாவில் போராட்டத்தின் போது ஏற்படும் குப்பைகளை இளைஞர்கள் தாங்களாகவே அகற்றி வருகின்றனர். போராட்டக்காரர்களின் முன்மாதிரியான இந்த செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் 3-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உணவு குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். போராட்டங்கள் ஒரு புறம் தொடர்ந்தாலும், தங்களால் போடப்படும் குப்பைகளை தாங்களே அகற்றி மெரினாவில் போராடும் இளைஞர்கள் அனைவருக்கும் முன் மாதிரியாக திகழ்கின்றனர்‌.

குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட குப்பைகளை தாங்களாகவே அகற்றி போராட்ட பகுதியை சுத்தப்படுத்தும் இளைஞர்களின் செயல் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com