\
மதுபோதையில் இளைஞர் கொலை? - போலீஸ் வலைவீச்சு

மதுபோதையில் இளைஞர் கொலை? - போலீஸ் வலைவீச்சு

மதுபோதையில் இளைஞர் கொலை? - போலீஸ் வலைவீச்சு
Published on

கிருஷ்ணகிரியில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. டெம்போ ஓட்டுனரான இவர் நேற்று இரவு வீட்டருகே உள்ள ஏரி மைதானத்தில் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது மது போதையில் ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இன்று காலை அப்பகுதி வழியே சென்ற சிலர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com