முசிறியில் சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் கிரிவலம் சென்றவர் 5ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவில் உள்ளது சஞ்சீவிராய பெருமாள் கோவில். இந்தக் கோவிலுக்கு கிரிவலம் சென்ற இளைஞர் 5ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். அந்த இளைஞர் யார் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை. 5ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை தேடுவதில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உறவினர்கள் புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.