துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நாட்டு துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக 2 துப்பாக்கிகளைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவருக்கு விபத்து ஏற்பட்டதாகக் கூறி, அரசு மருத்துவமனையில் அவரது நண்பர்கள் சேர்த்தனர். மருத்துவ சோதனையில், சசிகுமாரின் வயிற்றுப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பதும், அதனால் அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்தவுடன் நண்பர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் வனப்பகுதியில் நடத்திய சோதனையில் இரண்டு துப்பாக்கிகளைக் கைப்பற்றினர். மேலும் 5 பேரிடம் விசாரித்து வருகின்றனர். வன விலங்கு வேட்டைக்குச் சென்ற போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததா அல்லது முன்விரோதம் காரணமாகக் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்தவாரம் குடியாத்தம் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com