தமிழ்நாடு
கேஸ் சிலிண்டர் தர தாமதமானதால் விபரீதம் - இளைஞர் மரணம்
கேஸ் சிலிண்டர் தர தாமதமானதால் விபரீதம் - இளைஞர் மரணம்
கேஸ் சிலிண்டர் தர தாமதமானதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கண்ணாடி தடுப்பை குத்தியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடிசேத்தி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கேஸ் வினியோகஸ்தரிடம் சென்று சிலிண்டருக்கு பதிவு செய்துவிட்டு அது உடனடியாக வேண்டும் எனக் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாலாஜி அருகில் இருந்த கண்ணாடித் தடுப்பை கையால் ஓங்கி குத்தியுள்ளார். அப்போது கண்ணாடி சில்லு பாலாஜி கையில் குத்தியதில் காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகளவில் வெளியேறியது. இதைத் தொடர்ந்து மயங்கி விழுந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.