DEAD IMAGE
DEAD IMAGEPT WEP

"எனக்குத் திருணம் வேண்டாம்" என கூறிய இளைஞர்.. நிச்சயதார்த்தம் செய்து வைத்ததால் எடுத்த விபரீத முடிவு!

செய்யாற்றில் நிச்சயதார்த்தம் செய்து வைத்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள வடமாவந்தல் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்(26). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது வீட்டில் திருமணம் வேண்டாம் எனக் கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு விஜய்க்குத் அவருடைய பெற்றோர் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்து போன அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

DEAD IMAGE
மதுரை: வடமாநில தொழிலாளியை கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்!

பின்னர் இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பிரியோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் வேண்டாம் எனக் கூறிய இளைஞருக்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com