பொள்ளாச்சி: குதிரை மீது வைத்திருந்த பேரன்பு... உயிரை மாய்த்து கொண்ட இளைஞர்!

குதிரை மீது கொண்ட பேரன்பால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mohana Prasanth
Mohana PrasanthPT Desk

பொள்ளாச்சியை அடுத்த மஞ்ச நாயக்கனூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் 54 வயதான பாலசுப்பிரமணியம். இவரது மகன் 24 வயதான மோகன பிரசாத். மோகன பிரசாத்துக்கு குதிரை மீது அலாதி பிரியம் இருந்ததாக தெரிகிறது.

இதனால் அவர் தனது தந்தையிடம் தனக்கென சொந்தமாக ஒரு குதிரை வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் குதிரை வாங்கி தர மறுத்துள்ளார்.

இதனால் தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதில் மனம் விரக்தி அடைந்த மகன் மோகன பிரசாத் வீட்டில் தூக்கிட்டு உள்ளார். பின்பு அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Mohana Prasanth
Mohana PrasanthPT Desk

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள ஆழியார் காவல் நிலைய போலீசார் மோகன பிரசாத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com