சப்-இன்ஸ்பெக்டர் வேடம் போட்டு பலரிடம் மோசடி.. வசமாக சிக்கிய இளைஞர்..!

சப்-இன்ஸ்பெக்டர் வேடம் போட்டு பலரிடம் மோசடி.. வசமாக சிக்கிய இளைஞர்..!
சப்-இன்ஸ்பெக்டர் வேடம் போட்டு பலரிடம் மோசடி.. வசமாக சிக்கிய இளைஞர்..!

காவல் உதவி ஆய்வாளர் வேடமணிந்து பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சூரங்குடியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகன் பாண்டிகுமார். இவர் சம்பவத்தன்று சரவணம்பட்டி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் சீருடையில் நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவர், பாண்டி குமாரின் பைக்கை வழிமறித்துஆர்சி புக், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார்.

ஆவணங்கள் சரியாக இருந்தபோதிலும் அவரிடம் பணம் பறிக்கும் நோக்கில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்துவதாக மிரட்டி 1000 ரூபாயை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பாண்டி குமார் இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து சரவணம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல் உதவி ஆய்வாளர் வேடமணிந்து வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் இறுதியில், அந்த வாலிபர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சார்ந்த வினு என்ற வினோத் என்பதும், காவல் உதவி ஆய்வாளர் வேடமணிந்து மோசடி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து வினோத்தை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு ஏற்கெனவே வினோத் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் தனியார் தங்கும் விடுதியில் மாணவர்கள் அறைக்குள் புகுந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தங்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு கஞ்சா சோதனை செய்வதாக கூறி 3 பேரின் செல்போன்களை பறித்துச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மூன்று போலிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் தலைமறைவாக முக்கிய குற்றவாளியான வினோத் தேடப்பட்டு வந்ததும், இந்த கும்பல் பல காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com