தமிழ்நாடு
மெரினாவில் இளைஞர்கள் மீண்டும் கூடுவதாக தகவல்.... காவல்துறை குவிப்பு
மெரினாவில் இளைஞர்கள் மீண்டும் கூடுவதாக தகவல்.... காவல்துறை குவிப்பு
சென்னை மெரினாவில் இளைஞர்கள் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மெரினாவில் நாளை கூடுவதற்காக இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனால் மெரினாவில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் கூட்டம் கூடக் கூடாது என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மெரினாவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வருவோரை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.