\
சென்னையில் தந்தை, மகனுக்கு கத்தி குத்து - மதுபோதையில் இளைஞர்கள் அத்து மீறல்

சென்னையில் தந்தை, மகனுக்கு கத்தி குத்து - மதுபோதையில் இளைஞர்கள் அத்து மீறல்

சென்னையில் தந்தை, மகனுக்கு கத்தி குத்து - மதுபோதையில் இளைஞர்கள் அத்து மீறல்
Published on

சென்னை மயிலாப்பூரில் தந்தை, மகனை கத்தியால் குத்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாட்டான் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருள், தமிழரசன் மற்றும் மனோஜ். இவர்கள் மூன்று பேரும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தும், மது அருந்தி விட்டு பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் கேன் விநியோகம் செய்யும் மணிகண்டன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது திடீரென அருள், தமிழரசன் ஆகிய இருவரும் மணிகண்டனை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதைக் கண்ட மணிகண்டனின் தந்தை குமார் தடுக்க முயன்றுள்ளார். அவரையும் கத்தியால் தாக்கிவிட்டு மூன்று பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, மருத்துவமனைக்கு வந்திருந்த மனோஜை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com