காதலிப்பதை நிறுத்திய பெண்ணின் சகோதரிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய இளைஞர்

காதலிப்பதை நிறுத்திய பெண்ணின் சகோதரிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய இளைஞர்

காதலிப்பதை நிறுத்திய பெண்ணின் சகோதரிக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய இளைஞர்
Published on

கோவையில் காதலிப்பதை நிறுத்திய இளம் பெண்ணின் சகோதரிக்கு ஆபாச படங்களை பகிர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் வேலை செய்து வருகிறார். சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம் பெண்ணும், ரூபனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்த பெண் ரூபனிடமிருந்து விலகி காதலிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் காதலித்து வந்தபோது இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்திலும், சமூக வளைதளங்களிலும் பகிர்வதாக மிரட்டியதோடு, அந்த பெண்ணின் சகோதரியின் கைப்பேசிக்கு ஆபாச படங்களை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண்ணின் சகோதரி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் ரூபனிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆபாச படங்களை பகிர்ந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ரூபன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com