புத்திமதி கூறிய முதியவரை குடிபோதையில் அடித்துக் கொன்ற வாலிபர்..!

புத்திமதி கூறிய முதியவரை குடிபோதையில் அடித்துக் கொன்ற வாலிபர்..!

புத்திமதி கூறிய முதியவரை குடிபோதையில் அடித்துக் கொன்ற வாலிபர்..!
Published on

புத்திமதி சொன்ன முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி எம்.ஜிஆர் நகரை சேர்ந்தவர் கனகவேல் அய்யப்பன்(30). இவர் வீட்டின் மேல் பகுதியில் பெத்தனசாமி(80) என்பவர் வசித்து வருகிறார். 

இந்நிலையில், கனகவேல் அய்யப்பன் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு அடிக்கடி அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த பெத்தனசாமி, அடிக்கடி கனகவேல் அய்யப்பனுக்கு புத்திமதி கூறி கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கனகவேல் அய்யப்பன், பெத்தனசாமியை மரக்கட்டையால் தலையில் அடித்ததில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பெத்தனசாமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெத்தனசாமி உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த தேனி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து கனகவேல் அய்யப்பனை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com