மதுரை சித்திரை திருவிழாவில் பட்டாக்கத்தியுடன் ஆட்டம்: இளைஞரை அலேக்காக கைது செய்த போலீஸ்

மது போதையில் சில இளைஞர்கள் சித்திரை திருவிழா கூட்டத்தில் பட்டாக்கத்தியோடு நடனம் ஆடியுள்ளனர்.
Madurai
MaduraiPT DESK

மதுரை சித்திரை திருவிழாவில் பட்டாக்கத்தியுடன் ஆட்டம் போட்ட இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழா நேற்று அதிகாலை நடைபெற்றது. இந்த திருவிழாவிற்காக மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில் இந்த கூட்டத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்தன.குறிப்பாக நகை பறிப்பு, செல்போன் பறிப்பு, பக்தர்கள் மீது கத்தி குத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களும் நடைபெற்றது.

இந்நிலையில் மது போதையில் சில இளைஞர்கள் சித்திரை திருவிழா கூட்டத்தில் பட்டாக்கத்தியோடு நடனம் ஆடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த வீடியோக்கள் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் சித்திரை திருவிழா கூட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பட்டாக்கத்தியோடு ஆட்டம் போட்ட ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த 19 வயதான மணிகண்டன் என்ற இளைஞர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com