தமிழக போலீஸை விமர்சித்தவர் நாடு கடத்தப்பட்டு அதிரடி கைது..!

தமிழக போலீஸை விமர்சித்தவர் நாடு கடத்தப்பட்டு அதிரடி கைது..!

தமிழக போலீஸை விமர்சித்தவர் நாடு கடத்தப்பட்டு அதிரடி கைது..!
Published on

தமிழக போலீசாரை விமர்சித்து வீடியோ வெளியிட்டவர் நாடு கடத்தப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. தன் மனைவி உஷாவுடன் கடந்த மார்ச் மாதம் 7-ம் தேதி  மாலை தஞ்சாவூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், ராஜாவின் வாகனத்தை மறித்தார். ஆனால்  வாகனச் சோதனையின் போது நிற்காமல் சென்ற ராஜாவின் பைக்கை தூரத்தி சென்ற  காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைத்தடுமாறி‌ உஷா மற்றும் அவரது கணவர் ராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்தனர். அப்போது தலையில் பலத்தக் காயமடைந்த உஷா நிகழ்விடத்திலேயே, கணவர் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல் ஆய்வாளரால் உஷா மரணமடைந்ததாக கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் உடனே சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டது. தமிழக மக்கள் பலரும் காவல் ஆய்வாளர் காமராஜ் அத்துமீறிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில் தமிழக காவல்துறையினருக்கு எதிராக தகாத வார்த்தைகளில் பேசி விமர்சனம் செய்து சங்கரலிங்கம் என்பவரும் இணையத்தில் வீடியோ வெளியிட்டார்.

இதனையடுத்து சங்கரலிங்கம் மீது கடந்த 21.03.2018 அன்று  திருச்சி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்யவும் தமிழக போலீசார் திட்டம் வகுத்தனர். உடனே யார் இந்த சங்கரலிங்கம்..? என நோட்டமிட்ட தமிழக காவல்துறையினர், அவரின் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளை வைத்து அவரின் முகவரியை கண்டறிந்தனர். அதில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அடுத்த நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்தனர். நெடுங்குளம் கிராமத்திற்கு போலீசார் சென்றபோது அவர் குவைத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து குவைத்தில் இருந்து சங்கரலிங்கத்தை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கையை போலீசார் துரிதப்படுத்தினர்.

அதன்பேரில் திருச்சி திருவெறும்பூர் காவல்நிலையத்தில் இருந்து மத்திய உள்துறை செயலகத்திற்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் குவைத்தில் வேலை செய்து வரும் சங்கரலிங்கத்தை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்திய உள்துறை செயலகம்,  வெளியுறவு அமைச்சகம் மூலமாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் இந்த வேண்டுகோளை வைத்தது. அதன் அடிப்படையில் இந்தியத் தூதரகம் மூலமாக, குவைத் அரசு, சங்கரலிங்கத்தை, இந்தியாவிற்கு  திருப்பி அனுப்பியது. அதன்பேரில் இந்தியாவிற்கு திரும்பிய சங்கரலிங்கத்தை திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து,  திருச்சி போலீசார் 30.07.2018 அன்று  கைது செய்துள்ளனர். தமிழக போலீசாரை விமர்சித்த காரணத்திற்காக நாடு கடத்தப்பட்டு இளைஞர் ஒரு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com