17 வயது சிறுமிக்கு ஆண்குழந்தை : திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன் கைது...!

17 வயது சிறுமிக்கு ஆண்குழந்தை : திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன் கைது...!

17 வயது சிறுமிக்கு ஆண்குழந்தை : திருமண ஆசை காட்டி ஏமாற்றிய காதலன் கைது...!
Published on

கொல்லிமலையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆரியூர் நாடு ஊராட்சி, தெவ்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணும், ஆரியூர்நாடு குழிவளவு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார்(22) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

திருமணம் செய்து கொள்ளவதாக கூறி அப்பெண்ணை ஆசைக்கு இணங்க வைத்து நந்தக்குமார் கர்ப்பமாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து திருமணம் செய்வதாக கூறிய நந்தகுமாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் திருமணம் குறித்து பேசியுள்ளனர். ஆனால் நந்தகுமார் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பெண்ணின் தந்தை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில், நந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com