கோயில் பணியாளரை தாக்கியதாக இளைஞர் கைது
கோயில் பணியாளரை தாக்கியதாக இளைஞர் கைதுpt desk

திருத்தணி: முருகன் கோயில் பணியாளரை தாக்கியதாக இளைஞர் கைது

திருத்தணி முருகன் கோயில் பணியாளரை தாக்கியதாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: B.R நரேஷ்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் பணியாளர் ரமேஷ் (47) என்பவர் மலைக் கோயில் விரைவு தரிசனம் வழியில் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலை கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் அபிஷேக் (19) என்பவர் இலவசமாக சென்று சாமி தரிசனம் செய்ய விடுமாறு தகராறு செய்து பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார்.

கோயில் பணியாளரை தாக்கியதாக இளைஞர் கைது
பெங்களூருவில் கொலை; சேலத்தில் வீசப்பட்ட பெண் உடல்.. ஒடிசாவை சேர்ந்த தம்பதியினரை கைது செய்த காவல்துறை

இதையடுத்து கோயில் பணியாளரை தாக்கி பிரச்னை செய்ததாக கோயில் இணை ஆணையர் ரமணியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அபிஷேக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com