மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - இன்ஸ்டாவினால் நேர்ந்த விபரீதம்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - இன்ஸ்டாவினால் நேர்ந்த விபரீதம்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - இன்ஸ்டாவினால் நேர்ந்த விபரீதம்
Published on

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 11 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் மதுரையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் எனக்கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையைச் சேர்ந்த அல்ஹசன் என்பவருக்கும் மாணவிக்கும் அறிமுகம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

நண்பர்களாக இருந்த இருவரும் நாளடைவில் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தனது அந்தரங்க புகைப்படங்களை அல்ஹசனுக்கு மாணவி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ‌அதை வைத்து மாணவியை மிரட்டிய அல்ஹசன், அவரை நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அளித்த புகாரின் பேரில் அல்ஹசனை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com