தூத்துக்குடி: பேரிடரில் சிக்கியவர்களின் பசியை ஆற்றும் இளைஞர்கள்! தினசரி பசியாறும் 4000 பேர்!

தூத்துக்குடியில் வெள்ளத்தில் பொருட்களை இழந்து தவிக்கும் மக்களைக் கண்டு மனம் வாடிய இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தினசரி நான்காயிரம் பேருக்கு உணவளித்து வருகிறார்கள்.

வேகவேகமாக சமையல் நடந்துகொண்டிருக்கிறது. கொதிக்க, கொதிக்க விதவிதமான உணவு வகைகளை இந்த இளைஞர்கள் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பெரியவர்களும் உதவிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சிகள் ஏதோ நிவாரணமுகாமோ, பொது விழாவோ அல்ல. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பசியாற்றும் முயற்சி.

தினசரி ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை இங்கு வந்து உணவு வாங்கிச் செல்கிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனையை உணர்ந்து அவர்களுக்காக தூத்துக்குடி மக்களும், இளைஞர்களும் ஒன்று சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். ராஜிவ் நகர், ஆசிரியர் காலனி, சின்ன மணி நகர், சிலோன் காலனி,தேவகி நகர், அசோக் நகர் போன்ற அருகில் உள்ள தெருக்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் வந்து இங்கு உணவு பெற்றுச்செல்கிறார்கள்.

தக்காளிசாதம், வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம் என விதம் விதமாக சமைத்துத் தருவதை, எந்த பேதமும் இல்லாமல் அனைத்துத்தரப்பினரும் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com