ஓடும் பேருந்து சக்கரத்தில் சாகசம் செய்த இளைஞர்: வைரல் வீடியோ !
சென்னையில் பேருந்தின் சக்கரத்தை மிதித்தபடி இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்த காட்சி வெளியாகியுள்ளது.
சென்னையில் பேருந்தின் சக்கரத்தை மிதித்தபடி இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் கம்பியில் தொங்கிக்கொண்டு தனது காலை பேருந்தின் சக்கரத்தில் வைத்து மிதித்தப்படி இருக்கிறார். வேகமான பேருந்து சென்றுகொண்டிருக்கையில் இது போன்ற ஆபத்தான செயலில் அந்த இளைஞர் ஈடுபட்டுள்ளார்.
இந்தக்காட்சியை பேருந்தின் பின்படியில் தொங்கிக்கொண்டு அவருடைய நண்பர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். மேலும் வீடியோவை இளைஞருடைய நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவ, வீடியோவை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனர்.
சென்னை இந்த வீடியோ காட்சியானது மின்ட் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகின்றனர். இது போன்ற செயல்களை தடுக்க சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.