திருச்சி | பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் #ViralVideo

தனியார் பேருந்தில் ஏறி நடத்துனரை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்.. அதிர்ச்சியில் உறைந்த பேருந்து பயணிகள்.. என்ன நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
தாக்கப்பட்ட நடத்துனர்
தாக்கப்பட்ட நடத்துனர்புதியதலைமுறை

செய்தியாளர் - பிருந்தா

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வரகனேரி சூளைக்கரை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய பெண்மணி ஒருவரை, சற்று தூரம் கடந்து இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணுக்கும் - நடத்துனருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, நடத்துனர் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

அதன்பின், துவாக்குடி சென்ற பேருந்து, மீண்டும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சூளைக்கரை பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த இளைஞர்கள் ஐந்து பேர் அந்த பேருந்தில் ஏறியுள்ளனர். ஏறிய வேகத்தோடு, “எப்படி ஒரு பெண்ணை திட்டலாம்?” என்று கூறி, பேருந்து நடத்துனரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இளைஞர்கள் நடத்திய தாக்குதலை கண்டு பேருந்தில் இருந்த பெண்கள் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைய, இளைஞவர்களோ சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கிடையே, இளைஞர்கள் தாக்குதல் நடத்திய காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அதனை வைத்து நடத்துனர் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com