‘மாமியார் தொல்லை தாங்க முடியல.. கணவர் நல்லவர்தான்..’ இளம்பெண் தர்ணா..!

‘மாமியார் தொல்லை தாங்க முடியல.. கணவர் நல்லவர்தான்..’ இளம்பெண் தர்ணா..!

‘மாமியார் தொல்லை தாங்க முடியல.. கணவர் நல்லவர்தான்..’ இளம்பெண் தர்ணா..!
Published on

கணவருடன் சேர்ந்து வாழ மாமியார் தடையாக இருப்பதாக கூறி கணவர் வீட்டின் முன்பு கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். திருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. வயது 34. இரண்டு பட்டப்படிப்பை முடித்துள்ள இவருக்கும் செல்வக்குமாருக்கும் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஆன்லைன் மூலம் வரன் பார்த்து பெற்றோர்கள் சம்மத்துடன் இத்திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்தின்போது வரதட்சணையாக செல்வக்குமாருக்கு ஜெயலட்சுமி வீட்டின் சார்பில் 40 சவரன் நகைள் உள்பட சீர்வரிசை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இதுதவிர கார் மற்றும் 2.5 லட்சம் ரூபாய் பணம் செல்வக்குமார் வீட்டின் சார்பில் அப்போது கேட்டிருக்கின்றனர். ஆனால் அதை தர முடியாது என ஜெயலட்சுமி வீட்டார் சார்பில் தெரிவிக்கப்பட்ட பின்பும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

தற்போது தம்பதியினருக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் திருமணம் ஆன நாள் முதலே கணவன்- மனைவிக்குள் அடிக்கடி தகராறு வந்திருக்கிறது. கோபத்தில் அடிக்கடி ஜெயலெட்சுமியை செல்வக்குமார் தாக்கியிருக்கிறார். இதுதொடர்பாக மடிப்பாக்கம் காவல்நிலையத்திலும் ஜெயலெட்சுமி சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஜெயலெட்சுமியை திருமணம் ஆன நாள் முதலே அவரது மாமியாருக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. ஜெயலெட்சுமியை எப்படியாவது தனது மகனிடம் இருந்து பிரித்துவிட வேண்டும் என்ற எண்ணத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. நாத்தனார் பிரச்னையும் ஜெயலெட்சுமிக்கு இருந்திருக்கிறது.

இந்நிலையில் ஜெயலெட்சுமி தனது தந்தை வீட்டுக்கு சென்ற நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் மடிப்பாக்கத்தில் இருந்து ஜெயலெட்சுமிக்கு தெரியாமல் வேளச்சேரியில் உள்ள வீட்டிற்கு மாறியிருக்கிறார் கணவர் செல்வக்குமார். இந்நிலையில் கணவருடன் சேர்ந்து வாழ தனது மாமியார் தடையாக இருப்பதாக கூறி கணவர் வீட்டின் முன் கைக் குழந்தையுடன் ஜெயலெட்சுமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ‘ கணவர் நல்லவர்தான். மாமியார், நாத்தனார் பிரச்னை தாங்க முடியல’  என்னை எப்படியாவது கணவருடன் சேர்ந்து வாழ வழி செய்யுங்கள் என அப்பெண் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.. இதனிடையே செல்வக்குமாருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com