’யாரும் விளையாட்டுக்கு அடிமையாக வேண்டாம்’ - இளைஞர் தற்கொலை.. விசாரணையில் திடீர் திருப்பம்

’யாரும் விளையாட்டுக்கு அடிமையாக வேண்டாம்’ - இளைஞர் தற்கொலை.. விசாரணையில் திடீர் திருப்பம்

’யாரும் விளையாட்டுக்கு அடிமையாக வேண்டாம்’ - இளைஞர் தற்கொலை.. விசாரணையில் திடீர் திருப்பம்
Published on

கரூரில் மேல்படிப்பு படிக்க முயற்சித்து வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் (20). இவர் கேட்டரிங் படிப்பை இடைநிறுத்தி விட்டு அவ்வப்போது கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றோர் வேலைக்கு போகச்சொல்லி திட்டியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது.

இந்நிலையில் சஞ்சய் தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் யாரும் விளையாட்டுக்கு அடிமையாக வேண்டாம் என்றும் மனம் அழுத்தத்தில் உள்ளதாகவும், 1 லட்சம் ரூபாய் இழந்துவிட்டதாகவும் பதிவிட்டுள்ளது இளைஞர் தற்கொலையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து இளைஞர் சஞ்சய் சூதாட்டத்தின் மூலம் பணத்தை இழந்திருப்பாரா அதனால் ஏற்பட்ட மன விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாரா எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com