பைக் மூலம் காரை TOW செய்த இளைஞர் - வைரலான வீடியோ
இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களை மற்றொரு வாகனத்தின் மூலம் கால்களால் உதைத்து TOW செய்யும் காட்சிகளை கண்டிருப்போம். ஆனால், இருசக்கர வாகனத்திலிருந்தபடி காரை TOW செய்து தள்ளிச் சென்றுள்ளார் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் சூழ்நிலைகேற்ப சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பான்மையான மாவட்டங்களில் போக்குவரத்து வசதிக்கான தளர்வுகள் கொடுக்கப்பட வில்லை. இதனால் மக்கள் காவல்துறையினரின் அனுமதியோடு சொந்த ஊர்களுக்கு பயணப்பட்டு கொண்டிருக்கின்றனர்.
அப்படி பயணப்படும் மக்களின் வாகனங்கள் செல்லும் வழியிலேயே பழுதாவதால் அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் இங்கும் ஒருவருக்கு வாகனம் பழுதானது. ஆனால் அந்த பயணிக்கு ஒருவர் உதவிய பாணி சற்று வித்தியாசமானதாக அமைந்துள்ளது.
இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களை மற்றொரு வாகனத்தின் மூலம் கால்களால் உதைத்து TOW செய்யும் காட்சிகளை கண்டிருப்போம். ஆனால், இருசக்கர வாகனத்திலிருந்தபடி காரை TOW செய்து தள்ளிச் சென்றுள்ளார் திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
மதுரை மேலூர் அருகே பழுதாகி நின்ற காரை, பழுது நீக்க முடியாததால், அந்த காரை நவீன் என்ற இளைஞர் திருச்சி திருவானைக்காவல் வரை TOW செய்து வந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் இருந்தபடியே தமது கால்களால் காரை உந்தித்தள்ளி, சுமார் 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு TOW செய்தது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள்ள்ளது.