குளத்தை காவல் காத்த இளைஞர் சுட்டுக் கொலை: மர்ம நபர்களை தேடும் போலீசார்

குளத்தை காவல் காத்த இளைஞர் சுட்டுக் கொலை: மர்ம நபர்களை தேடும் போலீசார்

குளத்தை காவல் காத்த இளைஞர் சுட்டுக் கொலை: மர்ம நபர்களை தேடும் போலீசார்
Published on

திண்டுக்கல் அருகே துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

திண்டுக்கல் - கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர், மாலப்பட்டி - செட்டிக்குளத்தை மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில், அவரது மகன் ராகேஷ், நேற்றிரவு குளத்தில் காவல் பணியில் இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத சிலர் ராகேஷை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.

அடுத்தடுத்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ந்து போன பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது உடலில் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், துடித்த ராகேஷை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் ராகேஷ் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மீன்பிடிக்கும் உரிமைக்காக ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்பகையால் ராகேஷ் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com