குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்

குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்
பழைய குற்றால அருவியில் குழந்தை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பழைய குற்றால அருவியில் தற்போது தண்ணீர் வரத்து அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் பாலக்காடு பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பழைய குற்றாலத்திற்கு குளிப்பதற்காக வந்துள்ளனர்.
அங்கு அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களின் பெண் குழந்தை ஒன்று தடாகப் பகுதி, அதாவது பாதுகாப்பு பாலத்தின் அருகே தண்ணீரால் அடித்து செல்லப்பட்டது.

இதனிடையே அந்த பகுதியில் இருந்த இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக கீழே இறங்கி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை பத்திரமாக மீட்டார். மேலும் குழந்தை தற்போது தென்காசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com