\
பட்டபகலில் இளைஞர் வெட்டி படுகொலை; தடுக்க முயன்ற நண்பருக்கு நேர்ந்த பரிதாபம்

பட்டபகலில் இளைஞர் வெட்டி படுகொலை; தடுக்க முயன்ற நண்பருக்கு நேர்ந்த பரிதாபம்

பட்டபகலில் இளைஞர் வெட்டி படுகொலை; தடுக்க முயன்ற நண்பருக்கு நேர்ந்த பரிதாபம்
Published on

பெரம்பலூரில் பட்டபகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தடுக்கமுயன்ற நண்பரையும் வெட்டிய 6 பேர் கொண்ட கொலை கும்பல் தப்பியோடியது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

பெரம்பலூர் பழைய பேருந்துநிலையம் பகுதியில் பெரியார் சிலை அருகேயுள்ள திருவள்ளுவர் நகரில் வசிக்கும் ராஜகோபால் - மல்லிகா தம்பதியின் மகன் வினோத்(29). தனியார் செல்போன் பழுதுநீக்கும் கடையில் வேலை பார்த்துவந்த இவரும் இவரது நண்பர் கார்த்தி என்பவரும் இன்று மாலை அப்பகுதியிலுள்ள கோயில் அருகே சென்றபோது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் வினோத் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தடுக்க முயன்ற வினோத்தின் நண்பர் கார்த்திக்கையும் அந்த கொலை கும்பல் சரமாரியாக தாக்கியிருக்கிறது.

இதில் படுகாயமடைந்த கார்த்திக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பதையும் தப்பியோடிய கொலையாளிகளையும் தேடிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com