\
வனவிலங்கிற்காக அமைக்கப்பட்ட மின்வேலி.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்...!

வனவிலங்கிற்காக அமைக்கப்பட்ட மின்வேலி.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்...!

வனவிலங்கிற்காக அமைக்கப்பட்ட மின்வேலி.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்...!
Published on

வேலூர் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த பூமாலை பகுதியில் மகாதேவன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. அப்பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி வந்து பயிர்களை சேதம் செய்து வந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த மகாதேவன் வனவிலங்குகள் வருவதை தடுக்க விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார்.

இந்நிலையில், வனவிலங்கு நுழையாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் அவ்வழியாக விவசாய நிலத்திற்கு சென்ற சந்தோஷ் என்பவர் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் நேற்று குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பம் அருகே விவசாய நிலத்தில் பிச்சாண்டி என்பவர் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com