தஞ்சாவூர்: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

தஞ்சாவூர்: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

தஞ்சாவூர்: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்!
Published on

ரயில்முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் ரயில் நிலையத்தில், இன்று காலை திருச்சியில் இருந்து மயிலாடுத்துறை சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அங்கு வந்த ரயில் இருப்பு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் காவல்துறையின் நடத்திய முதற்கட்ட விசாரனையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞர் அரித்துவாரமங்கலம் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் - தேவி தம்பதியினர் மகன் முத்துக்குமரன் (24) என்பது தெரியவந்துள்ளது. இவர், கும்பகோணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் முத்துக்குமரன் மனஅழுத்ததால் பாதிக்கப்பட்டு அதற்ககாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மனஅழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து முத்துக்குமரன் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com