தஞ்சை: ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

தஞ்சை: ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
தஞ்சை: ஆடு மேய்க்க சென்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆடு மேய்க்க சென்ற பெண் காணாத நிலையில், புதரில் சடலமாக அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், இளம்பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. கொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர், ஒரத்தநாடு அருகே ஆற்றங்கரையோரம் பதுங்கி இருந்த பெரியசாமி, சதீஷ் ஆகியோரை கைதுசெய்து அம்மாபேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, இருவரும், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடிவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com