\
புன்னகை மன்னன் பாணியில் சம்பவம்: காதலி மரணம், உயிர் தப்பிய காதலன்

புன்னகை மன்னன் பாணியில் சம்பவம்: காதலி மரணம், உயிர் தப்பிய காதலன்

புன்னகை மன்னன் பாணியில் சம்பவம்: காதலி மரணம், உயிர் தப்பிய காதலன்
Published on

புன்னகை மன்னன் திரைப்பட பாணியில் தற்கொலை செய்ய முயன்ற காதல் ஜோடியில் காதலி உயிரிழந்து, காதலன் உயிர்தப்பிய சம்பவம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடந்துள்ளது.

கூடலூர் அருகேயுள்ள கீழ்நாடுகாணியை சேர்ந்த ரம்யா என்ற பிளஸ் டூ மாணவி, நேற்று காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், தமிழக கேரள எல்லையில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் ரம்யா இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மாணவி ரம்யா கொலை தொடர்பாக, ராஜ்குமார் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்தபோதுதான், அவரும் ரம்யாவும் காதலித்து வந்ததும், காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததும் தெரியவந்தது. இதற்காக விஷம் குடித்தபோது ரம்யா உயிரிழக்க, ராஜ்குமார் உயிர்தப்பினார்.

ரம்யா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் கூறிய நிலையில், பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ராஜ்குமார் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். விஷம் குடித்தும் ராஜ்குமார் உயிர் பிழைத்தது எப்படி? விஷம் கொடுத்து காதலியை கொலை செய்தாரா என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com