'ஓசி சீட்டில் வரும் நீங்கள்'.. பெண்ணை தரக்குறைவாக பேசிய நடத்துநர்!.. நடவடிக்கையில் தாமதம்!

'ஓசி சீட்டில் வரும் நீங்கள்'.. பெண்ணை தரக்குறைவாக பேசிய நடத்துநர்!.. நடவடிக்கையில் தாமதம்!

'ஓசி சீட்டில் வரும் நீங்கள்'.. பெண்ணை தரக்குறைவாக பேசிய நடத்துநர்!.. நடவடிக்கையில் தாமதம்!
Published on

'ஓசி சீட்டில் வரும் நீங்க ஆண்கள் இருக்கையில் அமரக்கூடாது' என்று கைக்குழந்தையுடன் பேருந்தில் சென்ற பெண்ணை தரக்குறைவாக பேசிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகரில் வசித்து வருபவர்கள் சுரேஷ்குமார் - கௌசல்யா தம்பதியினர் தனியார் குடும்பத்தினருடன் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள கோயிலுக்குச் செல்ல சாஸ்திரி நகரில் இருந்து அரசு பேருந்தில் ஏறியுள்ளனர்.

இந்நிலையில், பேருந்தின் முன் இருக்கையில் இடம் இல்லாததால் பின் இருக்கையில் தனது கைக்குழந்தையுடன் அமர்ந்துள்ளனர். அப்போது பேருந்து நடத்துனர் செந்தில்குமார் என்பவர் ஆண்கள் இருக்கையில் அமரக்கூடாது என கூறியதாகவும் குழந்தையுடன் நிற்க முடியவில்லை எனக் கூறியதற்கு 'இலவச பயணச்சீட்டில் வரும் நீங்கள் அடுத்த பேருந்தில் செல்லுங்கள்' என தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தம்பதியினரை அனுப்பியுள்ளனர். அங்கு புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினர் மீண்டும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காத்திருந்து வருகின்றனர்.

மேலும் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்திய நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com