\
”கைரேகையை பதிவு செய்யாமல் பொங்கல் பரிசை பெறலாம்” - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

”கைரேகையை பதிவு செய்யாமல் பொங்கல் பரிசை பெறலாம்” - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

”கைரேகையை பதிவு செய்யாமல் பொங்கல் பரிசை பெறலாம்” - உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
Published on

கைரேகை இல்லாமல் ரூ.2500 உள்ளடக்கிய பொங்கல் பரிசை பெறலாம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

இது குறித்து புதியதலைமுறையிடம் பேசிய அவர், “ரூ 2500 உள்ளடக்கிய பொங்கல் பரிசை, குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாய விலை கடைகளில் மட்டுமே வாங்க முடியும். அதற்கு பயோ மெட்ரிக் முறை பயன்படுத்தப்பட மாட்டாது. ஆகையால் முன்னதாக குடும்ப அட்டையைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கிய முறைப்படியே பொங்கல் பரிசையும் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.  

முன்னதாக, பயோமெட்ரிக் முறையில் கைரேகை வேலை செய்வதில்லை என புகார் எழுந்தநிலையில் அமைச்சர் காமராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com